ரூ.23¾ கோடியில் புனரமைப்பு பணிகள்


ரூ.23¾ கோடியில் புனரமைப்பு பணிகள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் ரூ.23 ¾ கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

பூம்புகாரில் ரூ.23 ¾ கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ரூ.23.60 கோடியில் புனரமைப்பு

திருக்கடையூரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் வாடகை ரூம்கள், அடிப்படை வசதிகள், உணவு வழங்கும் இடம், ரூம்களுக்கான கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுற்றுலாத்துறை மூலம் படிப்படியாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ரூ 23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி இரண்டு இடங்களிலும் நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பூம்புகாரின் மேற்கொள்ளப்படும் பணி 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் விரைவாக முடிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

9 லட்சம் சுற்றுலா பயணிகள்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சியின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 6 லட்சத்து 60 ஆயிரமாக இருந்தது, இந்த ஆண்டு கடந்த நான்கு மாதங்களிலேயே 9 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது சுற்றுலா துறையின் வளர்ச்சியை காட்டுகிறது.

தரங்கம்பாடியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்நாடு ஹோட்டல் தற்போது செயல்படாமல் உள்ளது. அதனை மீண்டும் புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படுமா என்ற கேள்விக்கு, தரங்கம்பாடியில் செயல்படாமல் உள்ள மேற்கண்ட தமிழ்நாடு ஹோட்டலையும் பார்வையிட்டுள்ளேன். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி, உதவி கலெக்டர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்தகுமார், திருக்கடையூர் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் தினேஷ்குமார், செம்பனார்கோவில் தி.மு.க.மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story