கையுந்து பந்து போட்டியில் சாதனை
சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையுந்து பந்து போட்டியில் சாதனை படைத்து உள்ளனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் 2 பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் நேரு யுவேந்திரா சார்பில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் சித்தார்கோட்டை முகமதியா பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்று உள்ளனர். இதைத் தொடர்ந்து முகமதியா பள்ளிகளின் தலைவர் முகமது யூசுப், இணைத் தலைவர் கல்விக்கொடையாளர் ஷாஜகான், துணைத்தலைவர் அகமது கபீர், ஜமாஅத் தலைவர் தவ்பீக் கரீம், செயலாளர் சாகுல் ஹமீது, பள்ளியின் தாளாளர் ஹாஜா முகைதீன், செயலாளர் செய்யது அகமது கபீர், சங்க தலைவர் முகமது இப்ராஹிம், செயலாளர் அர்சத் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது. விளையாட்டில் சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் அலி, உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ்பாபு, ஷாஜகான் சலீம், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அஜிஸ் கனி உள்ளிட்டவர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.