தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 62¾ பவுன் நகை கொள்ளை:கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 கொள்ளையர்கள் உருவம்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 62¾ பவுன் நகை கொள்ளை:கண்காணிப்பு கேமராவில் பதிவான   2 கொள்ளையர்கள் உருவம்
x

தனியாா் நிறுவன மேலாளர் வீட்டில் 62¾ பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தனியாா் நிறுவன மேலாளர் வீட்டில் 62¾ பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலாளர் வீட்டில் கொள்ளை

நாகர்கோவில் சைமன்நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 38), தனியார் நிறுவன மேலாளர். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 7-ந் தேதியன்று பிருந்தா மற்றும் குழந்தை ஆகியோர் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

அதேசமயம் சங்கரநாராயணன் வேலை சம்பந்தமாக சென்றார். மறுநாள் அதிகாலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 62¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இரவில் மர்மநபர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 தனிப்படை அமைப்பு

இந்தநிலையில் கொள்ளையர்களை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 2 மா்மநபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அப்பகுதியில் அந்த நபர்கள் 2 பேரும் அங்கும் இங்கும் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் இருதினங்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story