இலங்கைக்கு கடத்த முயன்றரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்றரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
x

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு உள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு உள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல்

ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனவர் தேவகுமார், வனக்காப்பாளர் ஜான்சன் உள்ளிட்ட வனத்துறையினரும் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினா். வனத்துறையினரை கண்டதும் சிலர் வேகமாக தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது தென்னந்தோப்பு பகுதியில் பிளாஸ்டிக் கூடைகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 600 கிலோ இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு கிடந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

ரூ. 1 கோடி

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், ராமேசுவரம் எம்.ஆர்.டி.நகரை சேர்ந்த சேது என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து சேது உள்ளிட்ட மேலும் பலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமேசுவரத்தில் தென்னந்தோப்பில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டதாகவும், இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Next Story