பள்ளிபாளையம் அருகே 40 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பள்ளிபாளையம் அருகே 40 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியில் 40 சென்ட் இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டி அனுபவத்தில் வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகா மற்றும் அலுவலர்கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று அளவீடு செய்தனர்.
அப்போது அந்த தனிநபர் ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட 40 சென்ட் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
Next Story