வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கோர்ட்டு உத்தரவு
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஏரிக்கரை காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சுதா. இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இந்த இடம் மற்றும் வீடு ஆக்கிரமிப்பு தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்த கோவில் இடத்தை திரும்ப ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்டவர்களை வீட்டை விட்டு வெளியேற்றவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
நிலம் மீட்பு
இந்த நிலையில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோர்ட்டு ஊழியர் அனிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தி வீட்டுக்கு பூட்டு போட்டு 'சீல்' வைத்து, நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட கோவில் இடத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கோவில் செயல் அலுவலர் அறிவழகன் தெரிவித்தார்.