கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்பு


கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
x

மயிலாடுதுறையில் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடத்திற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடத்திற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவிலுக்கு சொந்தமான இடம்

மயிலாடுதுறை காவேரி நகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்தர்காடு திருஞானசம்பந்தர் கோவிலின் உபகோவிலாகும். சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,728 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் காவேரி நகர் பகுதியில் அமைந்துள்ளது.இந்த இடத்தில் ஒருவர் கட்டிடம் கட்டி சாக்கு குடோனாக பயன்படுத்தி வந்தார். இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ரூ.1 கோடி இடம் மீட்பு

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. முறையான அறிவிப்பு இன்றி கட்டிடத்தை பூட்டி சீல் வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.


Next Story