கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு; தற்கொலையா? போலீசார் விசாரணை


கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு; தற்கொலையா? போலீசார் விசாரணை
x

கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த பகுதி வண்ணாங்குளம். இங்கு கருவேல மரத்தில் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதாக நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.இதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் தனது கைலியால் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கிகொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சுமார் 1 வாரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. தூக்கில் பிணமாக தொங்கியவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story