கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி நிலம் மீட்பு


கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

கட்டாரிமங்கத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அழகிய கூத்தர் கோவிலுக்கு ெசாந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

ரூ.30 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

சாத்தான்குளம் அருகிலுள்ள கருங்கடல் கிராமத்தில் கடட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் ரூ.30 கோடி இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் குத்தகைக்கு எடுத்துவிட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத்துறைக்கு குத்தகை தொகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்து மானாவாரி விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும், அறநிலையத்துறை சார்பில் பலமுறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பு நிலைத்தை ஒப்படைக்காமலும், குத்தகை தொகையை செலுத்தாமலும் வேலி அமைத்து ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் தனிநபர்கள் ஆக்கிரமிப்பிலுள்ள அந்த கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

நிலம் மீட்பு

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் தலைமையில் தனித்தாசில்தார் ஈஸ்வரநாதன், கோவில் தக்கார் அஜித் மற்றும் கோவில் பணியாளர்கள், நில அளவையர்கள் கருங்கடல் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி ஆகியோர் நேற்று தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்திலிருந்த வேலிகளை அகற்றினர். அந்த நிலத்தை மீட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகையை நிலத்தில் நட்டனர்.

பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30கோடி கோவில் நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story