சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் மீட்பு


சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் மீட்பு
x

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை

ரூ.50 ஆயிரம் மீட்பு

திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் நேற்று தனது மகள் மான்சி (வயது 19) உடன் புதுக்கோட்டையில் நகர கூட்டுறவு வங்கியின் அருகே மாலை நேர சந்தைக்கு சென்றார். அப்போது சாலையில் கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை மான்சி எடுத்து தனது தந்தை சந்திரனிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் நேற்று ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் அந்த பணம் மாலை நேர சந்தையில் ஒரு கடையின் உரிமையாளரான காமராஜபுரத்தை சேர்ந்த சரவணன், செந்தில்குமார் ஆகியோருடையது என தெரியவந்தது.

உரியவரிடம் ஒப்படைப்பு

காதணி விழாவுக்கு செய்முறை செய்வதற்காக நகர கூட்டுறவு வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த போது தவறவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.

பணத்தை மீட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்தார். மேலும் அந்த பணத்தை உரியவரிடம் அவரையே ஒப்படைக்க வைத்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உடன் இருந்தார். மேலும் அவரது நேர்மையை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story