காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்பு


காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்பு
x

காணாமல் போன மூதாட்டி பிணமாக மீட்க்கப்பட்டார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி தாலுகா அலுவலகம் அருகில் செம்பொட்டல் என்ற இடத்தில் சாலை ஓரம் அழுகிய நிலையில் மூதாட்டி பிணம் கிடப்பதாக அப்பகுதியில் சென்றவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மூதாட்டி உடலை மீட்டு வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 10-ந் தேதி காணாமல் போன வலையப்பட்டி ராஜீவ் நகரைச்சேர்ந்த அடைக்கன் மனைவி மென்னி (வயது 70) தான் என அவர்களது உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன மூதாட்டியை யாரும் அடித்துக்கொன்று உடலை இங்கே போட்டு சென்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு ேகாணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story