மூதாட்டி உடல் அழுகிய நிலையில் மீட்பு


தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் மூதாட்டி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கீழதட்டப்பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மனைவி ஆவுடையம்மாள் (வயது 74). இவர் தனது மகள் சமுத்திரகனியுடன் வசித்து வந்தார். கடந்த 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ஆவுடையம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூதாட்டி ஆவுடையம்மாளை தேடி வந்தனர். இந்த நிலையில் தட்டப்பாறை-திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் உடல் அழுகி மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டது. வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்கெ்டர் (பொறுப்பு) ராமலட்சுமி மற்றும் போலீசார் ஆவுடையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் காட்டுப்பகுதிக்கு எப்படி வந்தார், கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story