108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வுவிழுப்புரத்தில் நாளை நடக்கிறது


108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வுவிழுப்புரத்தில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு விழுப்புரத்தில் நாளை நடக்கிறது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் 108 அவசரகால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. தேர்வுக்கு வருபவர்கள் அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வருவதுடன், மேலும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

இதில், மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்,பெண் பங்கேற்கலாம். பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி (பிளஸ்-2க்கு பின் இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி. ஜூவாலஜி, பாட்னி, பயோ கெமஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி) படித்து இருப்பவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக 15,435 ரூபாய் வழங்கப்படும். இதேபோன்று, டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகளும், பேஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டுகளும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரத்தை பொறுத்தவரை 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஊதியமாக 15,235 ரூபாய் வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து, தேர்வை எழுதி வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story