சேலம் லைன்மேட்டில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு


சேலம் லைன்மேட்டில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
x

சேலம் லைன்மேட்டில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகர ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு அன்னதானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 36 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 160 பேர் கலந்து கொண்டனர். இதில் 16 பேர் பெண்கள் ஆவர். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, 100 மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தயம், உயரம், மார்பளவு ஆகியன அளவீடு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சியின் போது ஒரு நாளைக்கு ரூ.55 சம்பளம் வழங்கப்படும். மாதம் 5 நாட்கள் பணி வழங்கப்படும். அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 சம்பளம் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்‌.

இந்த தேர்வின் போது, கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டர் பாலசுப்பிரமணியம், துணை ஏரியா கமாண்டர் ஷீபா ரீனால்டு பெஞ்சமின் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story