சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கு தேர்வு


சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கு தேர்வு
x

சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வினை 4 மையங்களில் 4,751 பேர் எழுதினர்.

விருதுநகர்


சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வினை 4 மையங்களில் 4,751 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வினை 6,030 பேர் எழுத வேண்டிய நிலையில் 1,279 தேர்வு எழுத வரவில்லை. 4,751 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். கலசலிங்கம் பல்கலைக்கழக மையத்தில் 3,000 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 2,470 பேர் தேர்வு எழுதினர். 530 பேர் வரவில்லை. செவல்பட்டி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் 1,673 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,397 பேர் தேர்வு எழுதினர். 276 தேர்வு எழுத வரவில்லை.

பாதுகாப்பு பணி

விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக்கில் 440 பெண்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 348 பேர் தேர்வு எழுதினர். 92 பேர் வரவில்லை.

விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மையத்தில் 917 பெண்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 736 பேர் தேர்வு எழுதினர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து மையங்களிலும் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளின் கண்காணிப்பில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் செய்திருந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story