அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பணி
நன்னிலம் அருகே வீடு,வீடாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பணி
திருவாரூர்
நன்னிலம்:
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் திருவாரூர் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் தென்னஞ்சார் கிராமத்தில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை மாப்பிள்ளை குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் பணி நடந்தது. இதனை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை, இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story