தாளாளர் பாலியல் தொல்லை: பள்ளி மாணவிகள் போராட்டம்
சென்னை அருகே பள்ளி தாளாளர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி திடீரென 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவ்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் போராடி வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலியல் தொல்லை புகாருக்கு ஆளான வினோத் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story