தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் சிவப்பு குதிரை வாகனம் வெள்ளோட்டம்
தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் சிவப்பு குதிரை வாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர் உற்சவத்திற்காக புதிதாக சிவப்பு குதிரை வாகனம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. இதையடுத்து குதிரை வாகன வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வில்லேந்தி வேலவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிவப்பு குதிரை வாகனம் அலங்கரிக்கப்பட்டு பிரகார உலா நடைபெற்றது. தொடர்ந்து ராஜ வீதிகளில் குதிரை வாகனத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி மங்கல இசையுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story