சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 57 மனுக்களுக்கு தீர்வு


சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 57 மனுக்களுக்கு தீர்வு
x

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 57 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 57 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கமிஷனர் அலுவலகங்களில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகங்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது.

அதன்படி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் தலைமையிலும், தாழையூத்தில் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதேபோல் துணை சூப்பிரண்டுகள் நாங்குநேரி ராஜூ, வள்ளியூர் யோகேஷ்குமார், அம்பை (பொறுப்பு) வெங்கடேசன், சேரன்மகாதேவி ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும், போலீஸ் நிலையங்களில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலும், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

57 மனுக்களுக்கு தீர்வு

இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் நிலுவையில் இருந்த மொத்தம் 86 மனுக்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகரிலும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றது.


Next Story