தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் அந்தந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக, மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. அதன்படி திருச்செந்தூர் கோட்டத்திற்கு ஆகஸ்டு 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் (வினியோகம்) அலுவலகத்திலும், தூத்துக்குடி நகர்புறத்திற்கு ஆகஸ்டு 10-ந்தேதி (புதன்கிழமை) ஒட்டப்பிடாரம் உதவி செயற்பொறியாளர் (வினியோகம்) அலுவலகத்திலும் நடக்கிறது.
விளாத்திகுளம்
இதேபோன்று, கோவில்பட்டி கோட்டத்திற்கு ஆகஸ்டு 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) கயத்தாறு உதவி செயற்பொறியாளர் (வினியோகம்) அலுவலகத்திலும், தூத்துக்குடி ஊரகத்திற்கு ஆகஸ்டு 23-ந்தேதி (செவ்வாய்கிழமை) விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் (வினியோகம்) அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.