கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி


கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x

மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மற்றும் அரியலூர் சரக கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கான வருடாந்திர புத்தாக்க பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

விழுப்புரம் மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டுறவு தணிக்கை துணை இயக்குனர் குணசேகரன், உதவி இயக்குனர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக கண்காணிப்பாளர் கதிர்வேல் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர்கள் மயில்முருகன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மற்றும் அரியலூர் மாவட்ட தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story