புதுப்பொலிவு பெற்ற ரோப்கார் பெட்டிகள்


புதுப்பொலிவு பெற்ற ரோப்கார் பெட்டிகள்
x

பழனி முருகன் கோவிலில் ேராப்கார் பெட்டிகள் புதுப்பொலிவு பெற்றன.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன. தொடர்ந்து அந்த புதிய பெட்டிகள் பொருத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரோப்கார் புதிய பெட்டிகள் பாறையில் உரசி விபத்துக்கு உள்ளாயின. அதைத்தொடர்ந்து புதிய பெட்டிகள் கழற்றப்பட்டு, மீண்டும் பழைய பெட்டிகள் பொருத்தி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ரோப்கார் நிலைய பெட்டிகளின் நிறத்தை மாற்றி பழையது போன்று காட்சி அளித்தது. எனவே உபரியாக வைத்திருந்த 2 பெட்டிகள் வர்ணம் பூசி பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வர்ணம் பூசப்பட்ட 2 பெட்டிகள் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. பின்னர் அந்த பெட்டிகள் ரோப்காரில் பொருத்தப்பட்டன. பார்ப்பதற்கு அழகாக உள்ளதால், பக்தர்கள் அதில் ஆனந்தத்துடன் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.


Next Story