நகை, சீர்வரிசை பொருட்களை தர மறுப்பு; 3 பேர் மீது வழக்கு
நகை, சீர்வரிசை பொருட்களை தர மறுப்பு; 3 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது 22). இவருக்கும் மல்லாங்கிணறை சேர்ந்த ஜெய்பீட்டர் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது. இந்நிலையில் திருமணம் ஆனதில் இருந்தே ஜெய் பீட்டர் மற்றும் அவரது பெற்றோர் ராஜ்குமார், எலிசபெத் விக்டோரியா ஆகிய 3 பேரும் ஜான்சி ராணியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜான்சிராணி கடந்த 2019-ல் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுள்ளார். ஆனாலும் திருமணத்தின் போது தரப்பட்ட நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை தராமல் ஜெய் பீட்டர் மற்றும் அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். இதுகுறித்து ஜான்சிராணி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார், ஜெய் பீட்டர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.