பெரம்பலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு


பெரம்பலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு
x

பெரம்பலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சி எல்லைக்குட்பட்ட குடியிருப்பு விரிவாக்க பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது. அம்மா உணவகத்துக்கு வருடாந்திர செலவு தொகை ரூ.9.5 லட்சம் ஒதுக்கீடு செய்தல், சாலைகள் செப்பனிடுதல், புதிதாக சாலை அமைத்தல், குடிநீர் தடையின்றி கிடைக்க பழுதடைந்த மின் மோட்டார்களை பழுது நீக்க நிதி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்ளிட்ட 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், முன்னாள் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் ஆதரித்தனர். ஆனால், நகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் தீர்மானத்தை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் முடிவுற்றது.


Next Story