மிளகு, ஏலக்காய் சாகுபடி குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி
போடியில், மிளகு, ஏலக்காய் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோழிக்கோடு பாக்கு, வாசனை பயிர்கள் மேம்பாட்டு இயக்ககம் சார்பில் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மிளகு, ஏலக்காய் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் போடி நறுமணப் பொருட்கள் வாரிய அலுவலக வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்தையா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். வாசனை மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் துறைத் தலைவர் ராமன் வரவேற்றார்.
பாம்பாடும்பாறை ஏலக்காய் ஆராய்ச்சி நிலைய தலைவர் முருகன் ஏலக்காயில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா, பயிர் பாதுகாப்பு மற்றும் வறட்சி மேலாண்மை குறித்து பேசினார். இணை பேராசிரியர் பிரபு, போடி நறுமணப் பொருட்கள் வாரிய முதுநிலை கள அலுவலர் செந்தில்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.