திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு


திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து   சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து சட்டமன்ற மதி்ப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆண்டிப்பட்டியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தை பார்வையிட்டனர். அங்கு மக்கும் மக்காத குப்பைகளில் இருந்து உயிர்சத்து உரம், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் உரங்கள் மக்களுக்கு எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரித்தனர். அப்போது தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜாராம், செயல் அலுவலர் சின்னசாமிபாண்டியன், தலைவர் சந்திரகலா, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தும் விதம் குறித்து விவரித்தனர்.


Next Story