வட்டார அளவிலான கலைத் திருவிழா; ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


வட்டார அளவிலான கலைத் திருவிழா; ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழாவை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வட்டார அளவிலான கலைத் திருவிழா தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் செல்வபாக்கிய சாந்தினி, அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முத்துச்செல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் காந்தி தொகுத்து வழங்கினார்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், தற்போது மாணவ-மாணவிகளின் கலை திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் கலைவிழா நடத்தப்படுகிறது. இதில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பரிசுகளை வழங்க உள்ளனர். குழந்தைகளின் கலைத்திறன் வளர ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலைமீது மிகுந்த ஈடுபாடுடன் இருந்தால்தான் குழந்தைகளுக்கு அதை கற்றுக் கொடுக்க முடியும். மாணவ, மாணவிகள் தமிழக அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி தங்களது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

விழாவில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மத்துரை, மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், இளைஞரணி சரவணன், காந்திநகர் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை அன்னத்தாய், விவசாய தொழிலாளரணி அஜய் மகேஷ்குமார், பட்டிமன்ற பேச்சாளரும் ஆசிரியருமான சங்கர்ராம், திரைப்பட உதவி இயக்குனர் உமாபாலன், உதவி பேராசிரியர் மேனகா, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சங்கர், ஆசிரியர் பயிற்றுநர்கள் சைமன், ஜமுனாராணி, சகிலா, மங்கையர்கரசி, சண்முகவடிவு, கங்காதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தராஜ் பாக்கியம் நன்றி கூறினார்.


Next Story