வட்டார போட்டியில் மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவிகள் சாதனை
வட்டார போட்டியில் மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
மெஞ்ஞானபுரம்:
பள்ளிகளுக்கு இடையேயான நாசரேத் வட்டார அளவிலான கபடி, கோ-கோ ஆகிய விளையாட்டு போட்டிகளில் மெஞ்ஞானபுரம் எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
குழு விளையாட்டு போட்டிகள், கபடி போட்டி மற்றும் தடகளப்போட்டிகள் ஆசீர்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குறுகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 14, 17, 19 ஆகிய வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனர். 14, 17 வயதிற்குட்பட்டோருக்கான கோ-கோ போட்டியில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர்.
வெற்றி வெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் விமலா, ஆசிரியர் டெய்சி அன்னமணி ஆகியோரை பள்ளி தாளாளர் சசிகுமார், தலைமை ஆசிரியர் சில்வியா ரேச்சல் ஆகியோர் பாராட்டினர். வெற்றி பெற்ற அனைத்து அணியினரும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.