வாணியம்பாடி நகராட்சி திட்டப்பணிகளை மண்டல இயக்குனர் ஆய்வு


வாணியம்பாடி நகராட்சி திட்டப்பணிகளை மண்டல இயக்குனர் ஆய்வு
x

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் நடந்து வரும் திட்டப்பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் நேரில் ஆய்வு ெசய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் நடந்து வரும் திட்டப்பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் நேரில் ஆய்வு ெசய்தார்.

வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் தனலட்சுமி வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து 15-வது நிதிக் குழு மூலம் ரூ.1 கோடியே 15 லட்சம் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் நகரப்பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஒப்பந்தப்புள்ளி நாட்களுக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.

முன்னதாக நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ள வணிக வளாகம் பகுதியில் ஆய்வு செய்த அவர் ஏலம் விடப்படாமல் உள்ள கடைகளை ஏலம் வைக்குமாறும், வணிக வளாக கட்டடத்தில் பழுதாகியுள்ளதை உடனே சீரமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள குத்தகை இனங்கள் மற்றும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உட்பட வரியினங்களை தீவிரமாக வசூல் செய்யவும் அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சதீஷ்குமார், இன்ஜினியர் ராஜேந்திரன், உதவி இன்ஜினியர் கோவிந்தப்பா, பணி மேற்பார்வையாளர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story