வட்டார அளவிலான கலை போட்டிகள்


வட்டார அளவிலான கலை போட்டிகள்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வட்டார அளவிலான கலை போட்டிகள்

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில ்‌6,7,8-ம் வகுப்பு பிரிவில் 7-ம் வகுப்பைச் சார்ந்த தமிழ் அமுதன் பறை போட்டியில் முதல் இடமும், டிரம்ஸ் போட்டியில் ஜெகதீஸ்வரன் முதல் இடமும், ஒயிலாட்ட போட்டியில் ஜுவிதாஷிரி முதல் இடமும் பெற்றனர். 9,10-ம் வகுப்பு போட்டியில் 9-ம் வகுப்பைச் சார்ந்த வாசு, பறை இசை போட்டியில் முதல் இடமும், டிரம்ஸ் போட்டியில் அருண் முதல் இடமும், கீ போர்டு போட்டியில் ஆல்வின் புஷ்பராஜ் முதல் இடமும், செவ்வியல் நடனத்தில் சுருதி முதல் இடமும், களிமண் சிற்ப போட்டியில் கமலேஷ் முதல் இடமும், தனி நடன போட்டியில் முகிதா‌ இரண்டாம் இடமும், பானை ஓவியப்போட்டியில் ஜெயபாலா இரண்டாம் இடமும், தலைப்பை ஒட்டி வரைதல் போட்டியில் பால் தினகரன் இரண்டாம் இடமும், பல குரல் பேச்சு போட்டியில் ஹரி சதிஷ் இரண்டாம் இடமும் ஆகியோர் தனிப்போட்டியில் வெற்றி பெற்றனர். குழுப் போட்டியில் விவாத மேடை போட்டியில் ரித்திஷ்குமார் குழுவினர் முதல் இடமும், சமுக நாடகப் போட்டியில் முகமது ஹாரிஸ்‌ மற்றும் நித்திஷ்குமார் குழுவினர் முதல் இடமும், கிராமிய நடனப் போட்டியில் வைஷ்ணவி மற்றும் நிஷா குழுவினர் இரண்டாம் இடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜோசப் இருதயராஜ், ஜெயந்தி ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், உதவித் தலைமையாசிரியை விமலா மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story