வட்டார அளவிலான கைப்பந்து போட்டி


வட்டார அளவிலான கைப்பந்து போட்டி
x

திருப்பத்தூர் அருகே மவுண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி பள்ளியில் வட்டார அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மவுண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி பள்ளியில் வட்டார அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

கைப்பந்து போட்டி

பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு சரகப் போட்டிகள் திருப்பத்தூர் சரகத்திற்கு திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவ, மாணவிகளிடையே 14, 17, 9 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மவுண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி பள்ளியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் ஜே.வி.நாச்சியாபுரம் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் நாச்சியாபுரம் பள்ளி முதலிடத்தையும் கண்டரமாணிக்கம் சேதுராணி பள்ளி 2-ம் இடத்தையும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் குன்றக்குடி டி.கே.ஜி. அரசு உதவி பெறும் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தது.

எறிப்பந்து போட்டி

இதை தொடர்ந்து நடைபெற்ற எறிபந்து போட்டியிலும் குன்றக்குடி, திருக்கோஷ்டியூர், நாச்சியாபுரம், புதுப்பட்டி, ஏரியூர், திருப்பத்தூர், கண்டரமாணிக்கம் உள்ளிட்ட பள்ளிகளிலிருந்து 10 அணிகள் பங்கேற்றன. இதில் 19 வயது பிரிவில் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குன்றக்குடி அரசு உதவி பெறும் டி.கே.ஜி. மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தன.

17 வயது பிரிவில் கண்டரமாணிக்கம் சேதுராணி மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஏரியூர் அரசுப்பள்ளி 2-ம் இடத்தையும் 14 வயது பிரிவில் டி.புதுப்பட்டி அரசுப்பள்ளி முதலிடத்தையும் திருக்கோஷ்டியூர் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் இளஞ்சூரியன், செல்லா வாசு, சிவக்குமார், முருகேசன், ஜோசப்நாதன் இருந்தனர்.


Related Tags :
Next Story