வட்டார விளையாட்டு போட்டி:கழுகுமலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை


வட்டார விளையாட்டு போட்டி:கழுகுமலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு வட்டார விளையாட்டு போட்டியில், கழுகுமலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கயத்தாறில் நடந்த வட்டார விளையாட்டு போட்டிகளில் கழுகுமலை அரசுமேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

விளையாட்டு போட்டிகள்

கயத்தாறு வட்டார குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், வானரமுட்டி, தெற்கு கோனார் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

வட்டு எறிதல்

இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் இப்பள்ளி மாணவி ஆனந்தி முதலிடமும், தமிழரசு, ரேணுகா ஆகியோர் 2-வது இடத்தையும் பிடித்தனர். அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் ஞானராஜ் முதலிடமும், மாலதி 3-வது இடத்தையும் பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில் யோவான் முதலிடமும், தமிழரசு 3-வது இடத்தையும் பிடித்தனர். மும்முனை தாண்டுதல் போட்டியில் கருப்பசாமி 3-வதுஇடத்தையும், தாவி குதித்தல் போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார். சதுரங்க விளையாட்டு போட்டியில் ஸ்ரீதர், அய்யப்பன், ஹரீஸ், நிதிஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

கபடி-எறிபந்து

எறிபந்து போட்டியில் 19 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் முதலிடமும், மாணவயிர் 2-வது இடத்தையும் பிடித்தனர். கையுந்து பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் முதலிடமும், மாணவிகள் 2-வது இடத்தையும் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு கபடி போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதலிடத்தையும், கைப்பந்து 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவிகள் முதலிடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் மாணவிகள் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றனர்.

பாராட்டு

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சாதனை மாணவ, மாணவிகளை கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் கந்தையா, சுந்தர்ராஜன், உடற்கல்வி இயக்குனர் ராஜ்மோகன், ஆசிரியர்கள் கருமலைராஜன், ரூபன், சொர்ணம் மற்றும் சகமாணவ, மாணவிகள், பெற்றோர் பாராட்டினர்.


Next Story