பதிவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பதிவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பதிவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி மண்டல சார் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பதிவுத்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி புரமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கியும், காலிப்பணியிடங்களை நிரப்பியும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story