மாநில தடகள போட்டியில் பங்கேற்க பெயர் பதிவுசெய்ய வேண்டும்


மாநில தடகள போட்டியில் பங்கேற்க பெயர் பதிவுசெய்ய வேண்டும்
x

மாநில தடகள போட்டியில் பங்கேற்க பெயர் பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. 14, 16, 18 மற்றும் 20 வயதுடையோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் tnathleticassociation.com என்ற இணைய தளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த இப்போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 11-ந்் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் 33-வது தென் மண்டல ஜூனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ்.சிவபிரகாசம் தெரிவித்துள்ளார்.


Next Story