கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் பதிவு தொடங்கியது
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் பதிவு தொடங்கியது.
மதுரை
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மத்திய அரசின் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் தரமான கொப்பரை கிலோ ஒன்று ரூ.108.60-க்கு கொள்முதல் செய்ய விவசாயிகள் பதிவு செய்ய தொடங்கப்பட்டது. வாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிமாறன் பதிவு செய்ய ஆவணங்களை சமர்ப்பித்தார். தென்னை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சிட்டா, நடப்பு பசலி அடங்கல், அசல் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ, தொலைபேசி எண் ஆகிய விவர ஆவணங்களை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறும் முதல் தர கொப்பரையினை தயார் செய்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறும் மதுரை விற்பனைக்குழு சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story