தென்காசி ெரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் சோதனை


தென்காசி ெரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் சோதனை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:15+05:30)

குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி ெரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் சோதனை நடந்தது.

தென்காசி

குடியரசு தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி ெரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரிலும், நெல்லை துணை சூப்பிரண்டு சுதிர்லால் அறிவுறுத்தலின் பேரிலும், நெல்லை இன்ஸ்பெக்டர் செல்வி ஆலோசனையின் பேரிலும் தென்காசி சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ரவிக்குமார், மாரியப்பன், செய்யது சிக்கந்தர் மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக தென்காசி ெரயில் நிலையம், ெரயில்வே மேம்பாலம், தென்காசி ெரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நடைமேடை பகுதிகளில் சோதனை நடத்தினர். மேலும் இருப்புப்பாதையிலும், சென்னை, மதுரை செல்லும் ெரயில்களிலும் தொடர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் பைகளையும் திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.Next Story