சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்


சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 12 Jan 2023 10:05 PM IST (Updated: 13 Jan 2023 3:45 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் விரிவாக்க பகுதியில், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 -வார்டுகள் உள்ளன. இதில், 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் லோயர்கேம்ப் விரிவாக்கப்பகுதியான கிருஷ்ணன்கோவில் கிழக்கு தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் காஞ்சனாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த சில தினங்களாக கிருஷ்ணன் கோவில்தெரு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. பொங்கல் பண்டிகை காலம் நெருங்குவதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.


Next Story