கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்


கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்
x

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார்.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்குவதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள், மின்வாரிய பணியாளர்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும் பணிகள், கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் போதும் சாலையோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா? என்பதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அத்துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story