பழுதடைந்த ரெகுலேட்டர் சீரமைக்கப்படுமா


பழுதடைந்த ரெகுலேட்டர் சீரமைக்கப்படுமா
x

கோட்டூர் அருகே முள்ளி ஆற்றில் பழுதடைந்த ரெகுலேட்டரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்;

கோட்டூர் அருகே முள்ளி ஆற்றில் பழுதடைந்த ரெகுலேட்டரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெகுலேட்டர் பழுது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஆதிச்சபுரம் சிவன் கோவில் அருகே முள்ளி ஆற்றில் ரெகுலேட்டர் அமைந்துள்ளது. இந்த ரெகுலேட்டர் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த ரெகுலேட்டர் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இருப்பக்க சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. புழுதிக்குடி, சோழங்கநல்லூர்,ஆதிச்சபுரம், நெம்மேலி, ஓவர் சேரி, சேந்தமங்கலம் ஆகிய கிராமங்கள் இந்த ரெகுலேட்டர் மூலம் தண்ணீரை தேக்கி பாசன வசதி பெறுகிறது.

விவசாயிகள் அவதி

ரெகுலேட்டர் கதவுகள் முற்றிலும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீரை தேக்கி சாகுபடிக்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. மழை, வெள்ள காலங்களில் இந்த ரெகுலேட்டர் தாக்குப்பிடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய ரெகுலேட்டர்

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பழுதடைந்த ரெகுலேட்டரை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் ரெகுலேட்டரை அகற்றிவிட்டு அதே இடத்தில் நடைபாதையுடன் கூடிய புதிய ரெகுலேட்டர் அமைக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story