பராமரிப்பின்றி கிடந்த கிணறு சீரமைப்பு


பராமரிப்பின்றி கிடந்த கிணறு சீரமைப்பு
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடந்த கிணறு சீரமைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 85 அடி ஆழத்தில் கிணறு அமைக்கப்பட்டது. அங்கு மோட்டார் பொருத்தாததால், கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் கிணறு பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நகராட்சி லாரி மூலம் தினமும் தண்ணீர் ரூ.3,000 செலவில் வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின் படி, கிணறு முழுவதும் சீரமைக்கப்பட்டு, அதில் உள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் வகையில் புனரமைக்கப்பட்டது. இந்த கிணற்றை தமிழ் புத்தாண்டு தினத்தன்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் திறந்து வைத்தார். தற்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதால் போலீசார் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story