மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை


மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை
x

மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தீயணைப்பு துறையின் மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஒத்திகை கவுல்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் வீரர்கள் கவுல்பாளையம் கல்குவாரியில் பொதுமக்கள் முன்னிலையில் மீட்பு பணி விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்டனர். தென்மேற்கு பருவமழைக்காலத்தில் வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிப்பது, நீர் நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது உள்ளிட்டவைகளை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை மூலம் விளக்கமாக செய்து காட்டினர்.


Next Story