ரேக்ளா பந்தயம்; காளைகள் சீறிப்பாய்ந்தன
குடிமங்கலம் ஒன்றியத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பிறந்தநாளை முன்னிட்டு குதிரை பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயம் பூளவாடி ரோட்டில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சியாம் பிரசாத் தலைமையில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முதல் போட்டியை தொடங்கி வைத்தார். மதியம் 2 மணியளவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர் பல் முளைக்காத காளைகளுக்கான ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பரிசுகளை போட்டி நடத்திய குழுவினர் வழங்கினர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை)மாட்டுவண்டி பந்தயம் நடைபெற உள்ளது.இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்