ரேக்ளா பந்தயம்


ரேக்ளா பந்தயம்
x
திருப்பூர்


பூளவாடியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.

ரேக்ளா பந்தயம்

பழந்தமிழர்களின் வாழ்வியலில் காளைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்பத்தில் பாரம் இழுப்பதற்கும் பயணம் செய்வதற்கும் காளைகள் பூட்டிய வண்டிகளை பயன்படுத்தினர். காலப்போக்கில் பொழுதுபோக்கு அம்சமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கும் விளையாட்டுகளில் காளைகளை ஈடுபடுத்த தொடங்கினர். அந்தவகையில் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போல கவுரவ அடையாளமாக ரேக்ளா பந்தயங்கள் பார்க்கப்படுகிறது. நமது பாரம்பரிய நாட்டு மாட்டினத்தை அழியாமல் பாதுகாப்பதில் இந்த வீர விளையாட்டுகளுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஜல்லிக்கட்டுக்கு எந்த அளவுக்கு புகழ் பெற்றவையோ அதே அளவுக்கு கொங்கு மண்டலம் ரேக்ளா போட்டியில் சிறந்து விளங்குகிறது. ரேக்ளா போட்டிக்கென தேர்வு செய்யப்படும் காளைகளை குழந்தையைப் போல வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கான சிறப்பு உணவுகள் மற்றும் பயிற்சியின் மூலம் காளைகள் பந்தயத்துக்கு தயார் படுத்தப்படுகின்றன. பந்தயத்தில் ஈடுபடும் காளைகள் வயது மற்றும் அவற்றின் உயரத்தின் அடிப்படையில் பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு மாடுகள் என தரம் பிரிக்கப்பட்டு, போட்டிக்கான தூரம் தீர்மானிக்கப்படுகிறது

அமைச்சர் சாமிநாதன்

குடிமங்கலத்தையடுத்த பூளவாடி பகுதியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டிகளில் திருப்பூர்,கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலம் ஒன்றிய தி.மு.க.வின் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்டசெயலாளர் இல.பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story