உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி


உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி
x

உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயற்சி

தஞ்சாவூர்

பேராவூரணியில் தற்கொலை செய்து கொண்டவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆத்தாளூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பழனிவேலு(வயது35). தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த பழனிவேலு நேற்று அதிகாலை 5 மணிக்கு தனது வீட்டின் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனிவேலு உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி்க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிணவறையில் பழனிவேலு உடல் வைக்கப்பட்டது. ஆனால் உடற்கூறாய்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

சாலைமறியலில் ஈடுபட முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த பழனிவேலு உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு பிரேத பரிசோதனை செய்ய காலம் தாமதம் செய்த டாக்டர் மற்றும் மருந்தாளுநரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story