போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் திடீர் தர்ணா
போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மாற்று மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதல் திருமணம் தொடர்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் திடீரென போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பெண்ணை தங்களோடு அனுப்பி வைக்க கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானபடுத்தினர். பெண் தனது காதலனோடு செல்ல விரும்பியதால் அவரோடு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story