மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு
கலசபாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் உயரம் 23 அடியாாகும்.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பொய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு மேல் உள்ளது.
மேலும் அணைக்கு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் காரணத்தால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு சுமார் 100 கன அடி தண்ணீர் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அணையின் அருகே உள்ள சிறுவள்ளூர், எர்ணாமங்கலம், அருணகிரிமங்கலம் உள்பட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருகின்றன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அணையின் கால்வாய் பகுதியின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.