கர்நாடக அணைகளில் இருந்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது.
மேட்டூர்:
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது.
இதனால் அந்த அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 24,286 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.
Related Tags :
Next Story