மிருகண்டா அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறப்பு
பருவமழை தொடங்கியதன் காரணமாக மிருகண்டா அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை
கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.
தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையில் 18.5 அடிக்கு மேல் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 65 கன அடி தண்ணீர் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அணையின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story