நெல்லையப்பர் கோவில் யானை குறித்த குறும்படம் வெளியீடு
நெல்லையப்பர் கோவில் யானை குறித்த குறும்படத்தை இந்து அறநிலைய துறையினர் வெளியிட்டு உள்ளனர்.
திருநெல்வேலி
தமிழகத்தில் யானைகள் உள்ள கோவில்களில் யானைகளின் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் குறும்படமாக தொகுத்து வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். அதன்படி நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் 'காந்திமதி' யானையின் அன்றாட நிகழ்வுகளை 50 வினாடிகள் ஓடக்கூடிய குறும்படமாக அறநிலையத்துறையினர் தயாரித்துள்ளனர். இதில் 'காந்திமதி' யானை ஷவரில் குளிப்பது, புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போடுவது, நடைபயிற்சி மேற்கொள்வது, யானைக்கு வழங்கப்படும் உணவுவகைகள் உள்ளிட்டவற்றை வீடியோவாக தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story