குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு2ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி பெறும்


குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து  பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு2ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி பெறும்
x

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி ெபறும்.

தண்ணீர் திறப்பு

டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் அருகே உள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. குன்றி, விளாங்கோம்பை மல்லிய துர்கம், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. அணையில் இருந்து வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

20 நாட்கள்

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி, குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர். இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் அணையில் பூஜை செய்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அடுத்த மாதம் 13-ந் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் வலது கரையில் 18 கன அடி தண்ணீரும், இடது கரையில் 6 கன அடி தண்ணீரும் என மொத்தம் 24 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இடையில் 4 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும். இதன் மூலம் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி ெபறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story